Vennilavu Saaral Lyrics (Tamil) – Amaran | Kapil Kapilan
Vennilavu Saaral Lyrics (Tamil) - Amaran
வெண்ணிலவு சாரல் நீ, வீசும் குளிர் காதல் நீ.
வெண்ணிலவு சாரல் நீ, வீசும் குளிர் காதல் நீ, ஆசை வந்து ஆசை தீர, ஆடுகின்ற ஊஞ்சல் நீ.
கொட்டும் பனி மாயம் நீ, கோடை வெயில் சாயம் நீ, துள்ளி விளையாடும் அன்பில், தூகையாகும் காலம் நீ.
மின்னல் மொத்தும் வாசல் நீயே, செல்லமான மீறல் நீயே, நெஜமெ எங்கும் தேடல் நீ.
வெண்ணிலவு சாரல் நீ, வீசும் குளிர் காதல் நீ, ஆசை வந்து ஆசை தீர, ஆடுகின்ற ஊஞ்சல் நீ.
வெண்ணிலவு சாரல் நீ, வீசும் குளிர் காதல் நீ.
பாதி நீயே என் பாதி நீயே, நீயில்லாமல் நான் ஏது கண்ணே.
ஆதி நீயே என் ஆயுள் நீயே, ஆணி வேரை நீங்காது மண்ணே.
எங்கே இருள் என்றாலும், அங்கே ஒளி நீதானே.
கண்ணாய் எனை நீயே காக்க, கண்ணீரையும் காணேனே, நீண்ட தூரம் போன போதும், நீங்குமா காதலே.
வெண்ணிலவு சாரல் நீ, வீசும் குளிர் காதல் நீ, ஆசை வந்து ஆசை தீர, ஆடுகின்ற ஊஞ்சல் நீ.
கொட்டும் பனி மாயம் நீ, கோடை வெயில் சாயம் நீ, துள்ளி விளையாடும் அன்பில், தூகையாகும் காலம் நீ.
மின்னல் மொத்தும் வாசல் நீயே, செல்லமான மீறல் நீயே, நெஜமெ எங்கும் தேடல் நீ.
Vennilavu Saaral Song Info:
Song: | Vennilavu Saaral |
Album: | Amaran (Film) |
Singer(s): | Kapil Kapilan , Rakshita Suresh |
Musician(s): | GV Prakash Kumar |
Lyricist(s): | Yugabharathi |
Cast: | Sai Pallavi, Sivakarthikeyan |
Label(©): | Saregama Music |